SRK: இடித்துக் கட்டப்படவுள்ள ஷாருக்கான் வீடு; போட்டிப் போடும் பில்டர்கள்; காரணம் என்ன? | Shah Rukh Khan's house is being demolished and a new one is being built

SRK: இடித்துக் கட்டப்படவுள்ள ஷாருக்கான் வீடு; போட்டிப் போடும் பில்டர்கள்; காரணம் என்ன? | Shah Rukh Khan’s house is being demolished and a new one is being built


அதில் இரண்டு பில்டர் தேர்வு செய்யப்பட்டு, இறுதியில் ஒரு பில்டர் உறுதி செய்யப்பட்டு, அந்த பில்டரிடம் பணிகள் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. ஷாருக்கான் தனது திருமணத்திற்குப் பிறகு மும்பை பாந்த்ராவில் ஒரு அறை கிச்சன் கொண்ட சிறிய வீட்டில் வசித்து வந்தார். அந்த வீடு அவருக்குப் போதுமானதாக இல்லை. இதனால் புதிய வீடு வாங்கும் முடிவில் ஷாருக்கான் இருந்தார். ஆனால் அதற்கு அவரிடம் போதிய பணம் இல்லாமல் இருந்தது. அந்நேரம் தயாரிப்பாளர் பிரேம் லால்வானி புதிய படம் ஒன்றில் நடிக்க ஷாருக்கானுக்கு வாய்ப்பு கொடுத்தார். உடனே புதிய வீடு வாங்க தனக்கு 40 லட்சம் கொடுக்கும்படியும், அதனை அடுத்து வரும் படங்களில் நடித்துக் கொடுத்துச் சரி செய்துவிடுவதாக ஷாருக்கான் தெரிவித்தார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

பிரேம் லால்வானியும் 40 லட்சம் கொடுத்தார். அந்த பணத்தில் அம்ரித் கட்டிடத்தில் ஷாருக்கான் புதிய வீடு வாங்கினார். அந்த வீட்டில் அதிக நாட்கள் இருந்த ஷாருக்கான் மன்னத் பங்களாவை வாங்கிய பிறகு பழைய வீட்டைத் தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார்.

ஏற்கனவே பாந்த்ரா பகுதியில் வசிக்கும் ஆமீர் கானுக்குச் சொந்தமான வீடு இருக்கும் கட்டிடமும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் வீடும் இடிக்கப்பட இருக்கிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *