மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11.02.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 12.02.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.02.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 26.02.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: மேஷ ராசியினரே… நீங்கள் எடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் வாங்குபவர்கள். இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்தில் வக்ர நிலையில் இருந்தாலும் குரு சாரம் பெற்றிருப்பதால் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்கின் மூலம் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். தன்னம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.
தொழில் ஸ்தானாதிபதி சனி லாப ஸ்தானத்தில் இருப்பதின் மூலம் பலம் பெற்றிருக்கிறார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
குடும்பாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். சுக்கிரனின் சார பலத்தால் தாய் தந்தையருடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் நீங்கும்.
பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு சக கலைஞர்கள் பொறாமை கொள்வார்கள். கடன் பிரச்சினை தீரும். செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும்.
அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. எடுத்துக்கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் மேன்மை ஏற்படும்.
அஸ்வினி: இந்த மாதம் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
பரணி: இந்த மாதம் குடும்பத்தின் மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான பேசி பொழுதை கழிப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கணவன் – மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். காரிய அனுகூலம் உண்டாகும். ஏதாவது மனகவலை இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள்.
பரிகாரம்: முருகனுக்கு வெண்பொங்கல் படைத்து வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 20. 21, 22 | அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |