மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சூரியன்- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) – பாக்கிய ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 28.01.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எதையும் கண்டு அஞ்சாமல் பணியாற்றுவீர்கள். வாக்குவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும். மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எல்லா வகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம்.
திருவோணம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: சனி பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும். வேலை பளு குறையும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சுக்கிரன், சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் குரு (வ) – பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் செவ்வாய்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 28.01.2025 அன்று ராசியில் இருந்து சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சுக பாக்கியாதிபதி சுக்கிரன் உச்சம் பெறுவதால் அனுபவ அறிவும், செயல்திறனும் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியல்வாதிகளுக்கு உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். பணியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
சதயம்: இந்த வாரம் காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: விநாயக பெருமானுக்கு தேங்காய் உடைத்து வழிபட எல்லா சிக்கல்களும் தீரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) – சுக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) – களத்திர ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் சூரியன் – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 28.01.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் ராசியில் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.
தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும்.
மாணவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை.
உத்திரட்டாதி: இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். சக ஊழியர்களின் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பீர்கள். புதியதாக சொத்து ஆர்வம் ஏற்படும்.
ரேவதி: இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |