Saif Ali Khan: "நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன" - கரீனா கபூர் வேதனை | Don't spread speculations, they pose a risk to our safety Kareena Kapoor's request

Saif Ali Khan: “நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன” – கரீனா கபூர் வேதனை | Don’t spread speculations, they pose a risk to our safety Kareena Kapoor’s request


மும்பையில் நேற்று (ஜனவரி 16) அதிகாலையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிகாலை நேரத்தில் மர்ம நபர் திருட வந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து சைஃப் அலிகானின் மனைவி நடிகை கரீனா கபூர் வெளியிட்டுள்ள செய்தியில், “நடந்த சம்பவம் எங்களது குடும்பத்திற்கு மிகவும் சவாலானதாக இருந்து வருகிறது. நடந்த நிகழ்வுகளை எங்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இருக்கும்போது, ஊகங்களைத் தவிர்க்கும்படி ஊடகங்கள் மற்றும் புகைப்படக்காரர்களை நான் மரியாதையுடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான்

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான்

எங்கள் மீதான கவலை மற்றும் ஆதரவை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் தொடர்ச்சியாக அது தொடர்பாகச் செய்திகளை வெளியிடுவது, அதில் அதிக கவனம் செலுத்துவது எங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். நாங்கள் இந்த சம்பவத்திலிருந்து வெளியில் வரவேண்டும். அதற்கான இடத்தை எங்களுக்குக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி”‘ என்று தெரிவித்துள்ளார்.

சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக அவர் வசிக்கும் கட்டிடத்தில் வேலை செய்த இரண்டு தொழிலாளர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தொழிலாளர்கள் மாடியில் டைல்ஸ் பதிக்கும் வேலையில் ஈடுபட்டனர். அவர்களுக்கும், சைஃப் அலிகானைத் தாக்கிய நபருக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சைஃப் அலிகான் வீட்டிற்கு வந்தவர் அக்கட்டிடம் குறித்த விபரங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளார். எனவேதான் அவருக்கு யாராவது கட்டிடத்தின் வடிவமைப்பு குறித்துத் தெரிவித்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொழிலாளர்கள் இரண்டு பேரிடம் விசாரித்து வருகின்றனர். சைஃப் அலிகானைக் குத்தியவரைப் பிடித்துத் தனி அறையில் அடைத்திருந்தனர். அதன் பிறகு சைஃப் அலிகானை மருத்துவமனையில் சேர்க்க மற்ற அனைவரும் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மர்ம நபர் தப்பிச்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *