இயக்குநர் பாலா இயக்கிய இத்திரைபடத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ‘வணங்கான்’ படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் அருண் விஜய். இவரை தவிர்த்து படத்தில் அறிமுக நடிகைகளான ரோஷினி மற்றும் ரிதா ஆகியோர் நடிப்பும் பாராட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அருண் விஜய் இயக்குநர் பாலாவிற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், ” வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என்னுடைய இயக்குநர் பாலா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.