Thalapathy 69: 'அந்தப் படத்தை விஜய் 5 முறை பார்த்தார்'- சொல்ல வந்த விடிவி கணேஷ்; தடுத்த இயக்குநர் |vtv ganesh about thalapathy 69 goes viral

Thalapathy 69: ‘அந்தப் படத்தை விஜய் 5 முறை பார்த்தார்’- சொல்ல வந்த விடிவி கணேஷ்; தடுத்த இயக்குநர் |vtv ganesh about thalapathy 69 goes viral


பட நிகழ்ச்சியில் பேசிய விடிவி கணேஷ் ” ‘பகவந்த் கேசரி’ படத்தினை விஜய் சார் 5 முறை பார்த்தார். அனில் ரவிப்புடி இயக்குவதற்கு கேட்டார். இவரோ ரீமேக் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவரை இயக்க 4-5 பெரிய இயக்குநர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், அவரோ அனில் ரவிப்புடி இயக்கட்டும் என்றார்.” உடனே மைக்கை வாங்கி அவரை பேச விடாமல் தடுத்த இயக்குநர் அனில் ரவிப்புடி, “விடிவி கணேஷ் சாரை ரொம்ப பிடிக்கும். ‘விஜய் 69’ படம் குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. அது குறித்து இங்கு பேசுவது சரியாக இருக்காது” என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2023ம் ஆண்டு பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தை அனில் ரவிப்புடி இயக்கி இருந்தார். இந்நிலையில் விடிவி கணேஷின் பேச்சும் அவசர அவசரமாக அவரை தடுத்த அனில் ரவிப்புடியின் நடவடிக்கையும் பகவந்த் கேசரி படத்தைத் தான் எச். வினோத் விஜய்யை வைத்து இயக்குகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *