null
What to watch on Theatre & OTT: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ்

What to watch on Theatre & OTT: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ – இந்தாண்டு பொங்கல் ரிலீஸ்


இந்த வாரம்…..அதாவது பொங்கல் வெளியீடாக தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட் இதோ!

கேம் சேஞ்சர் ( தெலுங்கு )

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முழு நீள கமர்ஷியல் ஏரியாவில் இறங்கி நடிகர் ராம்சரணை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் `கேம் சேஞ்சர்’. நேர்மையான தேர்தல் அதிகாரி பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடியில் களமிறங்குவதாக கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாகவும், இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

Untitled design 45 Thedalweb What to watch on Theatre & OTT: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ்
Game Changer & Madraskaaran

மெட்ராஸ்காரன் (தமிழ் )

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகம் நேரடியாக தமிழில் அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் மெட்ராஸ்காரன். கலையரசன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் கிராமப் பிண்ணனியிலான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

REKHACHITHRAM (மலையாளம்)

ஜோஃபின் டி சாக்கோ இயக்கத்தில் ஆஸிஃப் அலி , அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ரேக்க சித்திரம் (REKHACHITHRAM) . சூதாட்ட வழக்கில் சஸ்பென்ட் ஆகி பணிக்குத் திரும்பும் காவல் அதிகாரி இழந்த தனது பெயரை மீட்டெடுக்க விசாரிக்கும் மர்டர் கேஸ் தான் கதை. இந்த திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

Untitled design 46 Thedalweb What to watch on Theatre & OTT: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ்
Rekhachithram & Vanangaan

வணங்கான் (தமிழ் )

அருண் விஜயின் நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கியுள்ள திரைப்படம் வணங்கான் . கண் முன் நிகழும் அநியாயத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சாமானியன், அவனை சுற்றிய நடக்கும் நிகழ்வுகளுமாக விரிகிறது கதை. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

மதகஜராஜா (தமிழ் )

விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் உருவாகி 2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாக வேண்டிய திரைப்படம். ஆனால் அப்போது வெளியாகாமல் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தாண்டு பொங்கல் பண்டிக்கை ரிலீஸாக வருகிறது. சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி, மனோபாலா என பெரும் நடிகர் பட்டாளம் கொண்ட இந்த திரைப்படம் சுந்தர் சி- யின் ஃபேளவரில் தயாராகி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (12/01/2025 ) அன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது .

Untitled design 47 Thedalweb What to watch on Theatre & OTT: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ்
Madhagajaraja & Fateh

FATEH (ஹிந்தி)

கடத்தல் , மாஃபியா கும்பலை தேடி பிடித்து அழித்தொழிக்கும் ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ள ஃபட்டே(FATEH) திரைப்படத்தை நடிகர் சோனு சூட் இயக்கி நடித்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

DEN OF THIEVES 2 – PANTERA (ஆங்கிலம்)

2018- ம் ஆண்டு வெளியாகி நல்ல வசூல் செய்த `டென் ஆஃப் தீவ்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் `டென் ஆஃப் தீவ்ஸ்: பன்டேரா (DEN OF THIEVES 2 – PANTERA)’ நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.

Untitled design 48 Thedalweb What to watch on Theatre & OTT: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ்
DEN OF THIEVES 2 – PANTERA & NOSFERATU

NOSFERATU (ஆங்கிலம்)

பேய் , வேம்பையர், சஸ்பென்ஸ் என ஹாரர் கதையம்சத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் நோஸ்ஃபெரட்டு (NOSFERATU) இன்று (10/01/2025) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஒடிடி:

MaXXXine (ஆங்கிலம்) Jio Cinema – Jan 5

Neeli Megha Shyama (தெலுங்கு) Aha – Jan9

மிஸ் யூ Prime – Jan 10

அதோ முகம் Aha – Jan 10

Bachhala Malli (தெலுங்கு) Prime – Jan 10

Hide N Seek (தெலுங்கு) Aha – Jan 10

நேரடி ஒடிடி திரைப்படங்கள் :

Goldfish (இந்தி) Prime – Jan 8

100 Crores (தெலுங்கு) Aha – Jan 11

6762cef1d8c2d Thedalweb What to watch on Theatre & OTT: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ்
Miss You

ஒடிடி தொடர்கள்:

American Primeval (ஆங்கிலம்) Netflix – Jan9

Call (ஆங்கிலம்) Prime – Jan 9

Black Warrent (இந்தி)Netflix – Jan 10

VIKATAN PLAY

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

WhatsApp Image 2024 11 18 at 16.55.14 1 Thedalweb What to watch on Theatre & OTT: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ்



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *