மோகன்லால் இயக்கியுள்ள ‘பரோஸ்’ வெளியீட்டை முன்னிட்டு மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் ‘பரோஸ்’ இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னிட்டு மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ”தனது நடிப்பு திறமையால் நம்மை கவர்ந்த மோகன்லால், இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் ‘பரோஸ்’.
அவருடைய அசாத்திய அனுபவமும் ஞானமும் இந்தப் படத்துக்குப் பலன் தரும் என்று நான் நம்புகிறேன். என் அன்பான மோகன்லாலுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம் ‘பரோஸ்’. இதனை விளம்பரப்படுத்த தமிழ்நாடு, ஆந்திரா என பயணம் மேற்கொண்டார் மோகன்லால். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதற்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், இசையமைப்பாளராக லிடியன் நாதஸ்வரம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ഇത്ര കാലം അഭിനയ സിദ്ധി കൊണ്ട് നമ്മളെ ത്രസ്സിപ്പിക്കുകയും, അത്ഭുതപ്പെടുത്തുകയും ചെയ്ത മോഹൻലാലിന്റെ ആദ്യ സിനിമ സംവിധാന സംരംഭമാണ് ‘ബറോസ് ’
ഇക്കാലമത്രയും അദ്ദേഹം നേടിയ അറിവും പരിചയവും ഈ സിനിമക്ക് ഉതകുമെന്ന് എനിക്കുറപ്പുണ്ട്.എന്റെ പ്രിയപ്പെട്ട ലാലിന് വിജയാശംസകൾ നേരുന്നു… pic.twitter.com/cFiTrWc0Dz