சாக்ஷி அகர்வாலின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சாக்ஷி அகர்வாலின் திரைப்படங்கள் தாண்டி அவரது புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘சாஃப்ட்வேர் கன்டா’ கன்னட படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் சாக்ஷி.
2018-ல் வெளியான ‘ஓராயிரம் கிணக்கலால்’ மலையாள படத்தின் மூலம் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
ரஜினியின் ‘காலா’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 3’ படங்களில் கவனம் பெற்றார்.
சாக்ஷிக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் இன்னும் அமையவில்லை.
இருப்பினும் அதனை நோக்கிய பயணத்தை தொடரும் சாக்ஷிக்கு கைகொடுப்பது அவரின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்.