தமிழ், தெலுங்கு, இந்தி எனத் தன் திரைத்திறமையை இந்தியா முழுவதும் கொண்டு சென்று தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகை சமந்தா.
ஆனால், சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு, அவரைச் சுற்றி வலம் வந்த சலசலப்புகள் எனத் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில்தான், சமந்தா நடிப்பில் வெளியான ’சிட்டாடெல்: ஹனி பனி’ வெப் சீரீஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. சமீபமாகத்தான் அவர் சமூகவலைத்தளங்களில் மீண்டும் இயங்கத் தொடங்கினார்.
இதற்கிடையில், தற்போது அவரின் தந்தை காலமாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “Untill we meet again Dad” எனப் பகிர்ந்திருக்கிறார்.
சமந்தாவின் தந்தையான ஜோசப் பிரபு, கேரளாவைச் சேர்ந்த நினெட் பிரபு என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை சமந்தா திரைத்துறைக்கு வரும் வரை, சமந்தாவின் குடும்பம் நடுத்தரக் குடும்பமாகவே இருந்து வந்திருக்கிறது.
தன் தந்தை குறித்து நடிகை சமந்தா ஒரு பேட்டியில், “என் அப்பாவிடமிருந்து கிடைக்க வேண்டிய அங்கிகாரத்துக்காக நிறையப் போராடியிருக்கிறேன். எனக்குத் தெரிந்து இந்தியப் பெற்றோர்களில் பெரும்பாலானவர்களின் மனநிலை அப்படிதான் என நினைக்கிறேன். மேலும் என்னிடம் அடிக்கடி நீ ஸ்மார்டான பெண் இல்லை எனக் கூறுவார். நீண்டகாலமாக நான் என்னை அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த எண்ணம்தான் என்னை வடிவமைக்க உதவியது. இப்படித்தான் இந்திய அப்பாக்கள் இருப்பார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/ParthibanKanavuAudioBook
![Samantha: 'Until we meet again dad' - தந்தை ஜோசப்பின் மரணம் குறித்து சமந்தா உருக்கம் 4 WhatsApp Image 2024 11 18 at 16.55.15 Thedalweb Samantha: 'Until we meet again dad' - தந்தை ஜோசப்பின் மரணம் குறித்து சமந்தா உருக்கம்](https://gumlet.vikatan.com/vikatan/2024-11-18/brjbsb5l/WhatsApp-Image-2024-11-18-at-16.55.15.jpeg)