‘புஷ்பா 2’ மேடையிலேயே தயாரிப்பாளரை ‘வறுத்த’ தேவி ஸ்ரீ பிரசாத்! | Devi Sri prasad slams puspa 2 producer on the stage

‘புஷ்பா 2’ மேடையிலேயே தயாரிப்பாளரை ‘வறுத்த’ தேவி ஸ்ரீ பிரசாத்! | Devi Sri prasad slams puspa 2 producer on the stage


‘புஷ்பா 2’ தயாரிப்பாளரை மேடையிலே கேள்வி எழுப்பி தேவி ஸ்ரீ பிரசாத் பேசிய பேச்சு சர்ச்சையாகி இருக்கிறது.

’புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசைப் பொறுப்பில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமன், சாம் சி.எஸ், அஜ்னிஷ் லோக்நாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இது தகவலாக வெளியானாலும், என்ன பிரச்சினை என்பது தெரியாமல் இருந்தது. இது குறித்து படக்குழுவினரும் அமைதி காத்து வந்தார்கள்.

இதனிடையே, ‘புஷ்பா 2’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது, மேடையிலேயே தயாரிப்பாளர் ரவியைக் குறிப்பிட்டு பேசியது பெரும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

‘புஷ்பா 2’ மேடையில் தேவி ஸ்ரீ பிரசாத், “தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளமாக இருந்தாலும் சரி, ஒரு பணிக்கான பெயராக இருந்தாலும் சரி, அதை நாம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் கோரவில்லை என்றால் யாரும் நமக்குத் தகுதியான நன்மதிப்பைக் கொடுக்க மாட்டார்கள்.

ரவி சார்… நான் பாடலையோ பின்னணி இசையையோ சரியான நேரத்தில் வழங்கவில்லை என்று கூறி என்னைக் குறை கூறுகிறீர்கள். நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் அன்பு இருக்கும் இடத்தில் புகார்களும் இருக்கும். இருப்பினும், அன்பை விட என் மீது உங்களுக்கு அதிக புகார்கள் இருப்பது போல் தெரிகிறது.

இப்போதும், ‘தவறான நேரம், நீங்கள் தாமதமாக வந்தீர்கள்’ என்று சொல்கிறீர்கள். நான் என்ன செய்வது? நான் 25 நிமிடங்களுக்கு முன்பு இங்கு வந்தேன், ஆனால் நீங்கள் உள்ளே வருவதை படமாக்க வேண்டும் என்று கூறி காக்க வைத்துவிட்டார்கள். அது எனது தவறில்லை.” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் தேவி ஸ்ரீ பிரசாத்.

இந்தப் பேச்சின் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இருவருக்கும் பிரச்சினைகள் இருப்பது தெளிவாகிறது. இதனாலேயே ‘புஷ்பா 2’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1340981' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *