Selvaraghavan: ``தமிழ் சினிமா நல்லா வரணும்னு பேசுறோம். ஆனால்..." - செல்வராகவன்

Selvaraghavan: “தமிழ் சினிமா நல்லா வரணும்னு பேசுறோம். ஆனால்…" – செல்வராகவன்


அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சொர்க்கவாசல்’. ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படம் சிறை வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் செல்வராகவன், “இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் படிச்சதும் நான் கேட்டது, இந்த ஸ்கிரிப் நீங்கதான் எழுதுனீங்களானுதான். உண்மையிலேயே சூட் முடிக்கிற வரைக்கும் இதைக் கேட்டுட்டேதான் இருந்தேன்.

672f9c908efae Thedalweb Selvaraghavan: ``தமிழ் சினிமா நல்லா வரணும்னு பேசுறோம். ஆனால்..." - செல்வராகவன்
சொர்க்க வாசல் திரைப்படம்

இந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் எழுதமுடியும்னு எனக்கு இப்போவும் நம்பிக்கை இல்லை. படம் பார்க்கும்போது உங்களுக்கே அது தெரியும். சாதாராணமா எழுதக் கூடிய ஸ்கிரிப்ட் இல்ல இது. இதுல பணியாற்றிய எல்லாருக்கும் சல்யூட். தமிழ் சினிமா நல்லா வரணும், நல்லப் படம் வரணும், புது எல்லையை நோக்கி போகனும்னு நிறைய பேசுறோம். ஆனா யாரும் அதைநோக்கிப் போறது இல்ல. ஆனா இந்தப் படம் அப்படி இல்ல. கண்டிப்பா இந்தப் படத்தை தியேட்டர்ல பாருங்க. இது ரொம்ப ரொம்ப முக்கியமானப் படம். இதுக்கு நான் கேரண்டி.” எனப் பேசினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *