சென்னை: நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பார்க்கிங்’. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சுதன் மற்றும் சினிஷ் இணைந்து தயாரித்திருந்தார்கள். இதற்குப் பிறகு ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவருடைய கதையில் விக்ரம் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.