1339543 Thedalweb கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.14 - 20 | Vara Rasi Palan for Kadagam,Simmam, Kanni up to Nov.14-20

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.14 – 20 | Vara Rasi Palan for Kadagam,Simmam, Kanni up to Nov.14-20


கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – ராசியில் செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சூரியன் – பஞ்சம ஸ்தானத்தில் புதன்(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்லுவீர்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வேற்று மதத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர் சீராகக் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும்.

கலைத்துறையினருக்கு முயற்சிகள் வெற்றிபெறும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சினை, தொழில் பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் – சுக ஸ்தானத்தில் புதன் (வ) – பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் – களத்திர ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் குரு (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அதீத கவனம் தேவை.

முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும்.

தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு குழப்பம் நீங்கும். அரசிய்லவாதிகளுக்கு பதவி கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் பைரவரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன்(வ) – சுக ஸ்தானத்தில் சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – களத்திர ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) – லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூர்யன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடங்கல்கள் அகலும் . மனக்கவலை நீங்கி சந்தோஷம் உண்டாகும். சொன்ன வார்த்தையை காப்பாற்றி நன்மதிப்பு பெறுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உதிக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு.

உறவினர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுந்து வந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு வீண் பழி ஏற்படலாம்

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வலம் வர எல்லா கஷ்டங்களும் நீங்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

17314873853065 Thedalweb கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.14 - 20 | Vara Rasi Palan for Kadagam,Simmam, Kanni up to Nov.14-20

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1339543' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *