Aurora: தமிழர்கள் மத்தியில் பிரபலமான அரோரா தியேட்டருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்; பின்னணி என்ன?

Aurora: தமிழர்கள் மத்தியில் பிரபலமான அரோரா தியேட்டருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்; பின்னணி என்ன?


மும்பை தமிழர்கள் மத்தியில் அரோரா தியேட்டர் என்றால் மிகவும் பிரபலம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரோரா தியேட்டரில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். தமிழகத்தில் எந்த படம் வெளியானாலும் அப்படம் அரோரா தியேட்டரில் அதே நாளில் வெளியாவது வழக்கம். இதற்காக மும்பை முழுவதும் இருந்து தமிழர்கள் அரோரா தியேட்டர் வருவார்கள். புதிய படங்கள் வெளியாகும்போது அரோரா தியேட்டர் விழாக்கோலம் பூண்டு இருக்கும். ஆனால் இப்போது அரோரா தியேட்டர் இருண்டு போய், ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.

forgotten1dec11 Thedalweb Aurora: தமிழர்கள் மத்தியில் பிரபலமான அரோரா தியேட்டருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்; பின்னணி என்ன?

தற்போது அரோரா தியேட்டர் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் மும்பை தமிழர்கள் இப்போது தமிழ்ப்படங்களைப் பார்க்க வேறு தியேட்டர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரோரா தியேட்டரை நம்பிராஜன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இப்போது அந்த தியேட்டர் யாருக்குச் சொந்தம் என்பதில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. தியேட்டர் உரிமையாளர் பிரச்னை, மல்டிபிளக்ஸ்களின் அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் இப்போது தியேட்டர் மூடப்பட்டுவிட்டது. இப்போது அரோரா தியேட்டரை இடித்துவிட்டு, அதில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது.

1984ம் ஆண்டில் இருந்து அரோரா தியேட்டருக்கான மும்பை மாநகராட்சியின் சொத்து வரி செலுத்தப்படாமல் இருக்கிறது. இதுவரை 2.74 கோடி ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டியிருக்கிறது. இதனை யார் கட்டுவது என்பதில் குழப்பம் எழுந்துள்ளது. 75 ஆண்டு பழமையான இத்தியேட்டர் மும்பை கிர்காவ் பகுதியைச் சேர்ந்த ஆர்.பி. ராவுத் என்பவர் பெயரில் இருக்கிறது. சொத்து வரி நிலுவைக்காக அரோரா தியேட்டரை மும்பை மாநகராட்சி நிர்வாகம் கையப்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக தியேட்டரில் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டி இருக்கிறது. அரோரா தியேட்டரை வாங்குவது தொடர்பான எந்தவித பரிவர்த்தனையிலும் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையின் பிரதான இடத்தில் அரோரா தியேட்டர் இருப்பதால் அதனை வாங்க பில்டர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். மும்பை தமிழர்களும், அரோரா தியேட்டரும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தன. ஆனால் இப்போது அது செயல்படாமல் மூடிக்கிடக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *