வல்லாரை இலையை வாயில போட்டு நன்றாக மென்று அந்த சாறை குடித்து வந்தால் குடலில் இருக்கக்கூடிய புண், குடல் நோய், வாய் புண், வாய் துர்நாற்றம் அனைத்தும் சரியாகி விடும்.
நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
www.thedalweb.com
இளநரை இருப்பவர்களும் சரி, அல்லது தலையில் வெள்ளை முடி இருப்பவர்களும் சரி தொடர்ந்து இந்த வல்லாரைக் கீரையை சாப்பிட்டுட்டு வரும்பொழுது, அந்த வெள்ளை முடி கருமையாக மாற ஆரம்பிக்கும்.
அஜீரணக் கோளாறுகள் எல்லாவற்றையும் நீக்கக்கூடியது இந்த வல்லாரைக்கீரை. வல்லாரைக் கீரையை நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்து , தோசையாக செய்து கொடுக்கலாம்.