97-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை வென்றது ‘அனோரா’! | 97th Oscar Awards Ceremony Anora wins 5 awards

97-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை வென்றது ‘அனோரா’! | 97th Oscar Awards Ceremony Anora wins 5 awards


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில், 97-வது ஆஸ்கர் விருது விழா, இந்திய நேரப்படி நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச அளவில் திரைத்துறையின் உயர்ந்த விருது விழாவான இதில் உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து திரையுலகினர் இதில் பங்கேற்றனர்.

விழாவை, பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார். இதில், ‘எமிலியா பரேஸ்’ என்ற பிரெஞ்சு மொழி படம், அதிகபட்சமாக 13 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத பிற மொழி படம் என்ற சாதனையை படைத்தது. இதில், பாலியல் தொழிலாளியின் காதலைப் பேசிய ‘அனோரா’ படம், 5 விருதுகளை வென்றது.

சிறந்த படம் (சீன் பேக்கர்), சிறந்த இயக்குநர் (சீன் பேக்கர்), சிறந்த ஒரிஜினல் திரைக்கதை (சீன் பேக்கர்), சிறந்த நடிகை (மைக்கி மேடிசன்), சிறந்த படத்தொகுப்பு (சீன் பேக்கர்) ஆகிய பிரிவுகளில் ‘அனோரா’ விருதுகளை வென்றது. ஒரே படத்துக்காக, 4 ஆஸ்கர் விருதுகளை ஒருவரே (சீன் பேக்கர்) வெல்வது இதுதான் முதல் முறை.

‘த புரூட்டலிஸ்ட்’ திரைப்படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகர் (அட்ரியன் ப்ரோடி), சிறந்த ஒரிஜினல் இசை (டேனியல் ப்ளூம்பெர்க்), சிறந்த ஒளிப்பதிவு (லால் கிராலே) ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை வென்றது.

மற்ற விருது விவரம்

துணை நடிகர்: கீயரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)

துணை நடிகை: ஜோ சால்டானா (எமிலியா பரேஸ்)

தழுவல் திரைக்கதை: கான்க்ளேவ்

விஷுவல் எபெக்ட்ஸ்: டூன்: பார்ட் 2

சிறந்த ஒலி அமைப்பு: டூன்: பார்ட் 2

வெளிநாட்டுத் திரைப்படம்: ஐம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)

ஆவணப்படம்: நோ அதர் லேண்ட்

ஆவணக் குறும்படம்: தி ஒன்லி கேர்ள் இன் த ஆர்கேஸ்ட்ரா

அனிமேஷன் படம்: ஃப்ளோ

ஆடை வடிவமைப்பு: பால் டாஸ்வெல் (விக்கட்)

ஒப்பனை, சிகையலங்காரம்: தி சப்ஸ்டேன்ஸ்

பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் டெல்லியில் எடுக்கப்பட்ட ‘அனுஜா’ என்ற குறும்படத்துக்கு விருது கிடைக்கவில்லை.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1353011' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *