அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் கடந்த 7-ம் தேதி வெளியான படம், ‘எமகாதகி’. இதில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய கீதா கைலாசம், “எமகாதகி ரொம்ப முக்கியமான படம். நான் 5, 6 படங்கள் நடித்து முடித்தவுடனேயே இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது.

இந்தக்கதை சொன்னபோதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டயலாக் ஒரு இடத்தில் மட்டுமே இருந்தாலும், படம் முழுக்க எனக்கான இடம் இருந்தது. இந்த கேரக்டரை என்னை நம்பித் தந்ததற்கு பெப்பினுக்கு நன்றி. ஒரு கிராமத்தில் கிட்டதட்ட 45 பேரும் ஒன்றாக இருந்தது நல்ல நினைவுகளைத் தந்திருக்கிறது. அந்த ஊர் மக்கள் எல்லோரும் நண்பர்களாகிவிட்டனர். 35 நாள்கள் ரூபா பிணமாக நடித்தார்.
அவரது அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. இந்தப்படத்தில் 35 நாள்கள் இழவு வீட்டில் இருந்து நடித்தோம். என் வாழ்வில் மிக முக்கியமான படம். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றவர் என்னை எல்லோரும் செல்லமாக ‘கோடம்பாக்கம் கோலிவுட்டின் லேட்டஸ்ட் அம்மா’ என்று சொல்கிறீர்கள் அது எனக்குப் பிடித்திருக்கிறது, சந்தோஷமாகவும் இருக்கிறது.

ஆனால் விரைவில் அதை மறந்து கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக எல்லோர் மனதிலும் நான் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX