22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு: அமரன், மகாராஜா உள்ளிட்ட படங்​களுக்கு விருது | Awards for films such as Amaran and Maharaja in chennai film festival

22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு: அமரன், மகாராஜா உள்ளிட்ட படங்​களுக்கு விருது | Awards for films such as Amaran and Maharaja in chennai film festival


சென்னை: சென்னை​யில் நடைபெற்ற 22-வது சர்வதேச திரைப்பட விழா​வில் சிறந்த திரைப் படங்​களாக தேர்வான ‘அமரன்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்​களுக்கு விருதுகள் வழங்​கப்​பட்டன. சிறந்த நடிகர் விருது விஜய்​சேதுப​திக்​கும், சிறந்த நடிகைக்கான விருது சாய்​பல்​லவிக்​கும் வழங்​கப்​பட்​டது.

இந்திய திரைப்பட திறனாய்​வு கழகம் சார்​பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12-ம் தேதி தொடங்​கியது. இதில் 60 நாடு​களில் இருந்து 180 படங்கள் திரை​யிடப்​பட்டன. திரைப்பட விழா​வின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்​கில் நேற்று மாலை நடைபெற்​றது.

இதில், திரைப்பட இயக்​குநர் பாக்​யராஜ், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தமிழ்​நாடு திரைப்பட தயாரிப்​பாளர் சங்கச் செயலாளர் டி.சிவா, திரைப்பட இயக்​குநர் சங்கத் தலைவர் ஆர்.​வி.உதயகு​மார் ஆகியோர் கலந்​து​கொண்டு, தேர்வு செய்​யப்​பட்ட கலைஞர்​களுக்கு விருது வழங்​கினர்.

17346610232006 Thedalweb 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு: அமரன், மகாராஜா உள்ளிட்ட படங்​களுக்கு விருது | Awards for films such as Amaran and Maharaja in chennai film festival

சிறந்த திரைப்​படங்கள் பிரி​வில் முதல் பரிசை ‘அமரன்’, இரண்​டாவது பரிசை ‘லப்பர் பந்து’ படங்கள் பெற்றன. சிறந்த நடிகர் விஜய் சேதுபதி (மகாராஜா), சிறந்த நடிகை சாய்​பல்லவி (அமரன்), சிறந்த ஒளிப்​ப​திவு சி.எச்​.சாய்​(அமரன்), சிறந்த படத் தொகுப்பு பிலோமின் ராஜ் (மகாராஜா), சிறந்த குழந்தை நட்சத்​திரம் பொன்​வேல் (வாழை), சிறந்த பொழுதுப்​போக்கு படம் வேட்​டையன், அமிதாப்​பச்சன் யூத் ஐகான் விருது நடிகர் அருள்​நிதி, சிறந்த இசையமைப்​பாளர் ஜி.வி.பிர​காஷ் குமார் (அமரன்) உள்ளிட்​டோர் தேர்வு செய்​யப்​பட்​டிருந்​தனர்.

அதேபோல, சிறப்பு நடுவர் விருது ‘ஜமா’ படத்​துக்கு வழங்​கப்​பட்​டது. குறும்​படங்​களுக்கான பிரி​வில் சிறந்த திரைப்​படமாக கயமை தேர்வு செய்​யப்​பட்​டிருந்​தது. இந்நிகழ்​வில், இந்திய திரைப்பட திறனாய்வு கழகத் தலைவர் சிவன் கண்ணன், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கஸ்​வாமி, பொதுச் செயலாளர் ஏவிஎம்​.கே.சண்​முகம், இணைச் செயலா​ளர் சுரேஷ் மேனன், நடிகர் அர​விந்த்​சாமி, இயக்​குநர்​கள் பா.ரஞ்​சித், ​மாரி செல்​வ​ராஜ், நடிகைகள் துஷாரா ​விஜயன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1343976' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *