அஜித்தின் “குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, அஜித் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
எந்தப் படமாக இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சிக் கொண்டாட்டம் பெரும்பாலும் ஆண்களுக்கானதாகவே இருக்கும்.

இந்நிலையில் ஈரோடு மற்றும் திருப்பூரில் ‘sri sakthi cinemas’ என்ற திரையரங்கம் முதன் முறையாகப் பெண்களை வரவேற்று, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைத்(FDFS) திரையிட்டிருக்கிறது.
இந்த முன்னெடுப்பைப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.