ஹிப் ஹாப் ஆதி தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்திருக்கிறார்.
‘கடைசி உலகப் போர்’ படத்துக்குப் பிறகு பல்வேறு இயக்குநர்கள் ஹிப் ஹாப் தமிழா ஆதியிடம் கதைகள் கூறி வந்தார்கள். ஆனால், எந்தவொரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். தற்போது அதில் ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
ஜூனில் தொடங்கவுள்ள இப்படத்தை ப்ரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது ஹிப் ஹாப் ஆதிக்கு நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இசைப் பணிகளுக்கு இடையே, ஹரிஹரன் ராம் படத்துக்காகவும் தயாராகி வருகிறார் ஹிப் ஹாப் ஆதி. இப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்.