வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் அட்வைஸ் செய்துள்ளார்.
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சில் ஒன்று நடைபெற்றது. அதில் ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி.பிரகாஷ், சுனில், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, முதலில் நண்பர் ஜி.வி.பிரகாஷுடன் திரையுலக பயணம் ஆரம்பித்ததைக் குறிப்பிட்டு தொடங்கினார். பின்பு அஜித்தை புகழ்ந்து பேசினார். அதனைத் தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ வெளியீட்டுக்கு பின்பு அஜித்திடம் தொலைபேசியில் பேசியதை குறிப்பிட்டார்.
அதில், “படம் வெளியானவுடன் அஜித் சாரிடம் பேசினேன். அப்போது “படம் ப்ளாக்பஸ்டர். அதை மறந்துவிடவும். இந்த வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம். அதே போல் தோல்வியை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம். அடுத்து என்ன என்று பணிபுரிய தொடங்குங்கள். தொடர்ந்து பணிபுரியுங்கள்” என்று தெரிவித்தார் ஆதிக் ரவிச்சந்திரன். மீண்டும் அஜித் படம் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் “இந்த வெற்றியை அனுபவித்து வருகிறேன். இந்த வாழ்க்கையும், அஜித் சாரும் இன்னொரு வாய்ப்பு வழங்கினால், இதே குழுவினருடன் மீண்டும் சந்தோஷமாக பணிபுரிவேன்” என்று தெரிவித்தார்.