வானம் கலைத் திருவிழாவில் வசந்தபாலன் சினிமா குறித்து சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். “வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாகச் சித்தரித்து இருப்பேன். அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

ரஞ்சித் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தலித் பற்றியப் பார்வை, ஜாதி பற்றியப் பார்வை, அதிகாரம் பற்றியப் பார்வை தமிழ் சினிமாவில் வேறு ஒன்றாக இருந்தது.
உண்மையிலேயே நாகராஜ் மஞ்சுளே, பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் ஆகியோர் வந்தப்பிறகு மொத்தப் பார்வையும் மாறி இருக்கிறது.