``விஜய்யை வச்சு ரூ.300 கோடிக்குப் படமெடுத்து ரூ.500 கோடி எடுக்குறது பெரிய விஷயமில்ல" - சுசீந்திரன்| director opens about his career challenges

“விஜய்யை வச்சு ரூ.300 கோடிக்குப் படமெடுத்து ரூ.500 கோடி எடுக்குறது பெரிய விஷயமில்ல” – சுசீந்திரன்| director opens about his career challenges


விஜய்யை வெச்சு ரூ.300 கோடிக்கு படம் பண்ணிட்டு ரூ.500 கோடி எடுக்குறது பெருசு இல்ல, 5 கோடில எடுத்துட்டு 500 கோடி எடுக்கணும். அங்க தான் டைரக்டர் நிக்குறான். அந்த முயற்சியை தான் திரும்பத் திரும்ப பண்ணிகிட்டே இருக்கேன். நான் அறிமுகம் பண்ணின ஆர்டிஸ்ட்களெல்லாம் நான் இப்போ கால் பண்ணினால்கூட எனக்கு டேட் கொடுப்பாங்க. விஷ்ணு விஷால், சூரி, ஹரிஷ் உத்தமன், அருள்தாஸ், ராமச்சந்திரன் இவங்க எல்லாம் எந்தப் படத்துல இருந்தாலும் நான் கால் பண்ணா பிச்சுட்டு ஓடி வந்து டேட் கொடுத்துருவாங்க.

புது முகங்கள் வெச்சு ஏன் பண்றீங்க, பெரிய படமா பண்ணுங்க, அஜித்த வெச்சு பண்ணுங்க ,விஜய்யை வெச்சு பண்ணுங்கன்னு சொல்லுவாங்க. அது எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும் கனவு தான். நான் சினிமா பண்ணனும்னுதான் வந்தேன், ரஜினி சார், கமல் சார், அஜித், விஜய் வெச்சு படம் பண்ண வரல. நான் சினிமால இருக்கணும் , அந்த சினிமா என்டர்டெய்ன்மென்ட்டா இருக்கணும். நான் நிச்சயமா 5 கோடி வெச்சு 100 கோடி எடுக்குற மாறி ஒரு படம் பண்ணுவேன். நான் அதுதான் சரியான பாதைன்னு நம்புறேன்”. என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *