நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம், உத்தராயணம் புண்யகால வசந்தருதுவில் ஆதி வாரமாகிய ஞாயிற்றுக்கிழமையில் 13,14-04-2025 (திங்கள்கிழமை அதிகாலை 3.00 மணி 21 நிமிடத்தில்) கிருஷ்ண பட்சத்து பிரதமை திதியில், சமநோக்குள்ள சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் துலாம் ராசியிலும், கும்பம் லக்னத்திலும், நவாம்சத்தில் சரவீடான லக்னத்திலும், தனுசு ராசியிலும் வஜ்ஜிரம் நாமயோகத்திலும் கவுலவம் நாம கரணத்திலும், சூரிய பகவான் ஓரையிலும் நேத்திரம் 2 ஜீவன் 1 நிறைந்த நாளிலும் பஞ்சபட்சிகளில் காகத்தின் ஆதிக்க நேரத்திலும், ராகு மகா தசையில் ராகு புக்தியில் இந்த வருடம் பிறக்கிறது.
விசுவாவசு வருடத்தின் வெண்பா
“விசுவாவசு வருடம் வெள்ளாண்மை யேறும்
பசுமாடுமாடும் பலிக்கும் – சிசு நாசம்
மற்றையரோவாழ்வார்கண் மாதவங்கண்மீறுமே
உற்றுவகினல்ல மழை யுண்டு”.
என்ற இடைக்காடர் சித்தரின் பாடலின் படி, உலகெங்கும் நல்லமழை பெய்து விவசாயம் தழைக்கும். பசு மற்றும் காளை உள்ளிட்ட கால்நடைகள் பெருகும். குழந்தைகளை வினோத நோய்கள் தாக்கும். பகைவர்களை சிலர் ஆதரிப்பர். ஒரு பக்கம் தவநெறிகள் ஓங்கி உயர்ந்தாலும் மறுபக்கம் நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும்.
இந்த வருடத்தின் ராஜாவாக சூரியன் வருவதால் கட்சியின் தலைவர்கள் மாற்றப்படுவார்கள். தொழிற்சாலைகள் கை மாறும். பூமியின் தட்பவெப்ப நிலைகள் கடுமையாக இருக்கும்.
மந்திரியாகவும் சூரியன் வருவதால் போராட்டங்கள் இருக்கும். பழைய சட்டங்கள் மாற்றப்படும். தொற்று நோய் பெருகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் திடீர் முடிவுகளை எடுப்பார்கள். மேகாதிபதியாக சூரியன் வருவதால் மரங்கள் வளரும் மழைப்பொழிவு உண்டு. சேனாதிபதியாக சனி வருவதால் எள், உளுந்து மற்றும் எண்ணெய் வித்துக்களின் மகசூல் பெருகும்.
இந்த வருடப் பிறப்பின் லக்னாதிபதியாகிய சனிபகவான்… தனஸ்தானமாகிய 2மிடத்தில் புதன், சுக்கிரன், ராகு சேர்ந்திருப்பதால் இவ்வருடம் கடல் சார்ந்த ஏற்றுமதிகள் அதிகமாகும். இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறை உருகுதல் மற்றும் வடமாநிலங்களில் நிலச்சரிவுகள், பெருவெள்ளம் ஏற்படும். மக்களுக்குக் கண்கள் மற்றும் கால்களில் புதுவிதமான நீர் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகும்.
இரண்டாமிடத்துக்குரிய குரு 4-மிடத்தில் சஞ்சாரம் செய்வதால் வருடக் கடைசியில் மத்திய மந்திரி சபையில் பெரும் மாற்றங்கள் நிகழும். குரு பகவான் சனியாலும் ராகுவாலும் பார்க்கப்படுவதால் நட்பு நாடுகள் பகை நாடுகளாக உருவாகும். திருமண நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும்.
மூன்றாமிடத்துக்குரிய செவ்வாய் 6-மிடத்தில் நீசம் பெறுவதால் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியடையும். கடன் சுமை அதிகமாகி பொதுமக்கள் தைரியமிழப்பார்கள். ஆறாமிடம் செவ்வாய் நீசம் பெற்று சந்திரன் 9-மிடம் சகடயோகத்தில் இருப்பதால், பொதுமக்களுக்கு ரத்தத்தில் புதுவகை நோய்கள் உருவாகும்.
பத்தாமிடம் குரு, சனி பார்வை பெற்று 10-மிடத்துக்குரிய செவ்வாய் நீசம் பெறுவதாலும், 11-மிடத்துக்குரிய குரு நான்காமிடம் சஞ்சாரம் செய்வதால் நாட்டில் தொழில் துறையில் வளர்ச்சி அதிகமானாலும், தொழில்துறையில் லாபம் குறைந்து மக்களின் கடன் சுமை அதிகரிக்கும். மக்கள் அதிக செலவாளிகளாக இருப்பார்கள்.
இவ்வருடம் குருபகவான் ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய 3 ராசிகளில் செல்வதால், உலகில் மக்கள் இயற்கைப் பேரழிவாலும், தொற்று நோயாலும், போராலும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
இந்த விசுவாவசு வருடம் ஆனது மக்களிடையே ஒரு பக்கம் மகிழ்ச்சியையும் மறுபக்கம் இனம் தெரியாத அச்சத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஸ்ரீவராகி அம்மனை தேய்பிறை பஞ்சமி திதிகளில் வணங்குவதுடன் ஆடை தானம் செய்வதும் நன்மையை தரும்.
12 ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |
'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1357882' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="
தொடர்புடைய செய்திகள்
Source link