வணங்​கான் எனக்கு முக்​கியமான படம்: அருண் விஜய் நெகிழ்ச்சி | Vanangaan important film in my career Arun Vijay

வணங்​கான் எனக்கு முக்​கியமான படம்: அருண் விஜய் நெகிழ்ச்சி | Vanangaan important film in my career Arun Vijay


பாலா இயக்​கத்​தில் அருண் விஜய் நடித்​துள்ள படம், ‘வணங்​கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்​திரக்கனி உட்பட பலர் நடித்​துள்ளனர். தனது வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்​பில் சுரேஷ் காமாட்சி தயாரித்​துள்ளார். அருண் விஜய்​யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்​தின் ரிலீஸ் தேதியை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. அதன்படி பொங்கல் அன்று வெளியாக இருக்​கிறது.

இந்தப் படத்தை, தனது குடும்பத்​தினருடன் அருண் விஜய் சமீபத்​தில் பார்த்​தார். கிளை​மாக்ஸ் முடிந்​ததும் அவருடைய குடும்பத்​தினர் கண்கலங்கினர். அருண் விஜய் இதற்கு முன் இப்படியொரு கதாபாத்​திரத்​தில் நடித்​த​தில்லை என்ப​தால், அவர்கள் கண்கலங்​கிய​தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இயக்​குநர் பாலா​வுக்கு நடிகர் அருண் விஜய் கடிதம் எழுதி​யுள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது:

நான் திரை​யுல​கில் கால் பதித்த காலத்​திலிருந்து, உங்கள் படைப்பு​களின் ரசிக​னாக​வும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, நடிக​னாக, ‘எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்​கா​தா?’ என ஏங்கிய​வனுக்கு தங்களின் இயக்​கத்​தில் பணியாற்ற ‘வணங்​கான்’ மூலம் வாய்ப்​பளித்​தமைக்கு மனமார்ந்த நன்றி. படப்​பிடிப்​பின்​போது கூட இக்கதை​யின் பாதிப்பை நான் முழு​மையாக உணரவில்லை. இப்போது வெள்​ளித்​திரை​யில் காணும்​போது, என் உணர்ச்​சிகளை வெளிப்​படுத்த வார்த்​தைகள் இல்லை.

என் பெற்​றோரைப் பெரு​மை​யில் நெகிழ்​வடைய செய்​தமைக்கு உங்களை வணங்​கு​கிறேன். எனது திரை​யுலக பயணத்​தில், ‘வணங்​கான்’ மிக முக்கியமான பாகமாக அமையும் என்ப​தில் துளி அளவும் சந்தேகமில்லை.

இப்படைப்​பின் மீது முழு​மையான நம்பிக்கை வைத்து, பக்கபலமாக இருந்து கொண்​டிருக்கும் சுரேஷ் ​கா​மாட்​சிக்​கும் நெஞ்​சார்ந்த நன்றி. இவ்வாறு அருண் விஜய் கூறி​யுள்​ளார்​.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1340355' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *