``ரூ.90 கோடி கடன், நடந்து சென்றேன்; இப்போது ரூ.3000 கோடிக்கு சொத்து..'' -மனம் திறந்த அமிதாப்பச்சன்

“ரூ.90 கோடி கடன், நடந்து சென்றேன்; இப்போது ரூ.3000 கோடிக்கு சொத்து..'' -மனம் திறந்த அமிதாப்பச்சன்


நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார்.

அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்கவேண்டியிருந்தது. தினம் தினம் கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். இக்கடனில் இருந்து மீண்டு வந்துள்ள அமிதாப்பச்சன் தனது 80 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

தனது கடன் தொல்லை குறித்து ஒரு முறை அமிதாப்பச்சன் அளித்திருந்த பேட்டியில், ”எனது 44 வருட சினிமா வாழ்க்கையில் நான் நிதி நெறுக்கடியில் சிக்கி இருந்த காலம் தான் மிகவும் இருண்டகாலமாகும்.

978ab0fe3debbcd6d7ed1a98d2a4a554original Thedalweb ``ரூ.90 கோடி கடன், நடந்து சென்றேன்; இப்போது ரூ.3000 கோடிக்கு சொத்து..'' -மனம் திறந்த அமிதாப்பச்சன்

கடன்காரர்கள் தினம் தினம் வீட்டு வாசலில் வந்து நின்றனர். அவர்கள் மிரட்டல் விடுத்தனர். கடுமையான வார்த்தைகளால் திட்டினர். எனது வீட்டை கூட பிடுங்க முயன்றனர்.

`பணம் வேண்டாம்; எனக்கு வேலை கொடுங்கள்’ 

டிரைவருக்கு சம்பளம் கொடுக்கக்கூட என்னிடம் பணம் இல்லை. இதனால் ஒரு முறை யாஷ் சோப்ரா வீட்டிற்கு முகத்தை மூடும் வகையில் தொப்பை அணிந்து கொண்டு நடந்தே சென்றேன்.

Screenshot 49 Thedalweb ``ரூ.90 கோடி கடன், நடந்து சென்றேன்; இப்போது ரூ.3000 கோடிக்கு சொத்து..'' -மனம் திறந்த அமிதாப்பச்சன்
`கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்வில் அமிதாப் பச்சன்

யாஷ் சோப்ராவிடம் சென்று எனது நிலையை எடுத்துக்கூறியதும் காலி காசோலையை கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளும்படி சொன்னார். ஆனால் நிதியுதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

எனக்கு வேலை கொடுங்கள். அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை பெற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்தேன். உடனே மொஹாபதியன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு கோன் பனேகா குரோர்பதி கைகொடுத்தது” என்று தெரிவித்தார்.

கை கொடுத்த `கோன் பனேகா குரோர்பதி’

அந்த நேரத்தில் கோன் பனேகா குரோர்பதி கை கொடுத்ததால்தான் இது வரை அந்த நிகழ்ச்சியை விடாமல் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.

amitabhabhishek16480883246091729767710289 Thedalweb ``ரூ.90 கோடி கடன், நடந்து சென்றேன்; இப்போது ரூ.3000 கோடிக்கு சொத்து..'' -மனம் திறந்த அமிதாப்பச்சன்
அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சன்

தந்தைக்காக படிப்பை விட்ட அபிஷேக் பச்சன்

அமிதாப்பச்சன் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தபோது அவரது மகன் அபிஷேக் பச்சனின் படிப்பும் பாதிக்கப்பட்டது. அபிஷேக் பச்சன் அந்நேரம் அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்.

இது குறித்து அபிஷேபச்சன் ஒரு முறை அளித்திருந்த பேட்டியில், ”நான் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனது தந்தை படம் தயாரித்து கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானார். உடனே குடும்பத்திற்கு உதவுவதற்காக நான் படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஓடிவந்தேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஒரு நேரத்தில் ரூ.90 கோடி கடனில் இருந்த அமிதாப்பச்சன் தற்போது 3 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்திருக்கிறார். அவரது கடினமான உழைப்புதான் இந்த அளவுக்கு அவரால் சொத்து சேர்க்க உதவியது.

பாலிவுட்டில் எந்த நடிகரும் இந்த அளவுக்கு தோல்வியை சந்தித்து மீண்டு வந்தது கிடையாது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

WhatsApp Image 2025 02 22 at 19.50.16 Thedalweb ``ரூ.90 கோடி கடன், நடந்து சென்றேன்; இப்போது ரூ.3000 கோடிக்கு சொத்து..'' -மனம் திறந்த அமிதாப்பச்சன்



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *