ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘பாகுபலி’ படங்கள் மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் உலகளாவிய வெற்றி ஆகியவற்றுக்குப் பிறகு ராஜமவுலியின் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது. 2026-ம் ஆண்டு இறுதி வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 2027-ம் ஆண்டே வெளியாகவுள்ளது.
இப்படத்தின் நாயகனாக மகேஷ் பாபு ஒப்பந்தமாகி பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். தற்போது இதன் நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகி உள்ளார். அவருடன் நடைபெற்ற நீண்ட மாதங்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். மேலும், படத்துக்கான பயிற்சிகளையும் தொடங்கி இருக்கிறார்.
மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா இருவருடன் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்க காடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.