‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே | Bassist Mohini Dey on link-up rumours with AR Rahman: He's like a father to me

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே | Bassist Mohini Dey on link-up rumours with AR Rahman: He’s like a father to me


“நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இனியும் இது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர். தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானிடம் கிட்டாரிஸ்டாக பணியாற்றிய மோஹினி தே தெரிவித்துள்ளார்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் அவர் மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். இதையடுத்து சில சமூக ஊடகங்களிலும் யூடியூப்பிலும் இவர்கள் பற்றி பல்வேறு அவதூறு கருத்துகள் வெளியாகின.

அதேபோல், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினி தே தனது கணவர் மார்க் ஹார்ட்சச் (Mark Hartsuch)-ஐ பிரிவதாக அறிவித்தார். இதை ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்துடன் தொடர்புப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியாகி இருந்தன. ஏற்கெனவே இந்த வதந்திகளைக் கண்டித்திருந்தார் மோஹினி தே.

இந்நிலையில் இது குறித்து மோஹினி தே மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவும், வீடியோவும் இணைத்துள்ளார். அதில் அவர், “எனக்கும், ஏஆர் ரஹ்மானுக்கும் எதிராக அடிப்படையே இல்லாத ஊகங்கள், தவறான தகவல்கள் பெருமளவில் வெளியாவதை என்னால் நம்பவே இயலவில்லை. நான் எனது சிறு வயதிலிருந்தே ரஹ்மானின் படங்கள், அவரது இசை டூர்களில் பணியாற்றியுள்ளேன். அந்த 8.5 ஆண்டு பயணத்தை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். ஆனால் இதுபோன்ற உணர்வுப்பூர்மான விஷயங்களில் பொதுமக்கள் எவ்வித மரியாதை, பரிவு மற்றும் அனுதாபம் இல்லாமல் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன். சில ஊடகங்கள் இந்த இரு சம்பவங்களையும் கொச்சைப்படுத்தியது குற்றச்செயல் எனக் கருதுகிறேன்.

ரஹ்மான் எனக்குத் தந்தையைப் போன்றவர். என் வாழ்வில் எனக்கு நிறைய ரோல் மாடல்கள், தந்தைக்கு நிகரான அன்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் பணி நிமித்தமான வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். எனது தந்தை இசையில் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தார். அவர் கடந்த ஆண்டு மறைந்தார். ரஞ்சிபரோட் தான் என்னை இந்த இசைத் துறையில் அறிமுகப்படுத்தினர். லூயி பாங்ஸ் என்னை செதுக்கினார். ஏஆர் ரஹ்மன் அவரது இசை நிகழ்ச்சியில் நான் மிளிர எனக்கு சுதந்திரம் தந்தார். அவரது ரெக்கார்டிங் செசன்களிலும் அவரது இசைக் கோப்புகளிலும் எனக்கு சுதந்திரம் தந்தார். அந்தத் தருணங்கள் மகத்தானவை. அவற்றை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்.

சில வதந்திகள் ஒருவரின் மனதில், வாழ்க்கையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என பரபரப்புச் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அறிவதில்லை. கொஞ்சமேனும் உணர்வோடு நடந்து கொள்ளுங்கள். நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இனியும் இது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இவை என் நாட்களில் குறுக்கிடுவதை நான் விரும்பவில்லை. தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கவும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1341106' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *