`ரயிலை தள்ளும் மேகமே...' காதலியை கரம் பிடித்த பாடகர் அறிவு! - இளையராஜா, திருமா பங்கேற்பு |lyricist and singer arivu got married with his girl friend

`ரயிலை தள்ளும் மேகமே…’ காதலியை கரம் பிடித்த பாடகர் அறிவு! – இளையராஜா, திருமா பங்கேற்பு |lyricist and singer arivu got married with his girl friend


அறிவும் கல்பனாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். கல்பனாவும் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்ந்து ஒடுக்குமுறைக்குகளுக்கு எதிரான தனது கருத்துகளை பல தளங்களில் பதிவு செய்து வருகிறார். `அட்டகத்தி” தினேஷ் நடிப்பில் இயக்குநர் அதியன் அதிரை இயக்கத்தில் உருவாகி வரும் `தண்டகாரண்யம்’ திரைப்படத்திலும் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கடந்தாண்டு அறிவு இசையில் 12 பாடல்களைக் கொண்ட `வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பம் வெளியாகியிருந்தது. அந்த ஆல்பத்திலுள்ள `தொடாத’ என்ற பாடலின் மியூசிக் வீடியோவையும் இயக்கியது கல்பனாதான்.

இவர்கள் இருவருக்கு இன்று சென்னையிலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று இந்த தம்பதியை வாழ்த்தியிருக்கிறார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.

வாழ்த்துகள் அறிவு மற்றும் கல்பனா!



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *