மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சந்திரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் புதன் , சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் (வ), சூரியன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 07-04-2025 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சுபபலன் உண்டாகும். எந்த ஒரு வேலையையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்திசாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. வீடு, மனை சம்பந்தமான காரியங்களில் இருந்து வந்த தொய்வுநிலை மாறும்.
தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினர் நிதானமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.
அஸ்வினி: இந்த வாரம் வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவச் செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.
பரணி: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தூர தேச பயணங்களை சற்று ஒத்திப்போடுவது நல்லது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று அம்பாளுக்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் குரு, சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் புதன், சனி – லாப ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் (வ), சூரியன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 07-04-2025 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மங்களச் செலவு உண்டாகும். உடற்சோர்வு நீங்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும்.
எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு முயற்சிகள் பலன் தரும். கலைத்துறையினருக்கு ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் வரும். அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சினைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். திடீர் செலவுகள் உண்டாகலாம். தேவையான இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி: இந்த வாரம் தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.
மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் வாராகி தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் செவ்வாய் – சுக ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் புதன் , சனி – தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் – அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சந்திரன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 07-04-2025 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அஷ்டமஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் சஞ்சாரம் வீண் மனக்கவலையை உண்டாக்கும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேலிடம் உங்களுக்கான பொறுப்புகளை அதிகரிக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு லாபம் ஏறப்டும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தாமதமான போக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
திருவாதிரை: இந்த வாரம் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உண்டாகலாம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |