1344466 Thedalweb மேஷம் முதல் மீனம் வரை: 2025 புத்தாண்டு பலன்கள் | Aries to Pisces: 2025 New Year's Results

மேஷம் முதல் மீனம் வரை: 2025 புத்தாண்டு பலன்கள் | Aries to Pisces: 2025 New Year’s Results


மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்) செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! இந்த வருடத்தில் மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள்.

வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கைக்கு வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். இந்த ஆண்டு உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். முன்னோர் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். முழுமையாக வாசிக்க > மேஷம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இந்த ஆண்டில் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம். உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்படும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள்.

சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். முழுமையாக வாசிக்க > ரிஷபம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்) புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! இந்த ஆண்டு அனைத்து விஷயங்களிலும் இருந்த தொய்வு நிலை மாறும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பொதுநலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். தனித்து நின்று போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள்.

உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். உங்களின் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். முழுமையாக வாசிக்க > மிதுனம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு செல்வச் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தரும். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகள் ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும்.

உங்கள் பேச்சில் வசீகரமும் இனிமையும் வேதாந்த ரகசியங்களும் கலந்து இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். தாயின் உடல் நலத்தில் சிறுசிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். பூர்வ புண்ணிய சொத்துக்கள் உங்களை வந்து சேரும். வெகுகாலம் தீராத பிரச்சினைகள் தரும். முழுமையாக வாசிக்க > கடகம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! இந்த ஆண்டு மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதரர் வழிசார்ந்த உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உருவாகும் . இதனால் மனம் மகிழ்ச்சி கொள்ளும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் எண்ணத்திற்கேற்ப நடந்து கொண்டு நற்பெயரை காப்பாற்றுவர்கள்.முழுமையாக வாசிக்க > சிம்மம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! இந்த ஆண்டு அயராது பாடுபடும் உங்களின் மனதைரியம் அதிகரிக்கும். சோம்பேறித் தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். தாய் வழி உறவுகளில் சுமுகமான நிலைமை ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பங்காளிகளும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். சமுதாய விழாக்களில் பங்கேற்பீர்கள். மற்றபடி எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

பிறர் கேட்காமல் அறிவுரை வழங்க வேண்டாம். பெரியோரை மதித்து அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவர்வீர்கள். நல்ல எண்ணத்துடன் செயல்களைச் செய்வீர்கள். முழுமையாக வாசிக்க > கன்னி ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே! இந்த ஆண்டு நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். சிறிய அளவு முயற்சிகள்கூட பெரிய பலனைத் தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சுலபமாக நடக்கும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் உபாதைகளுக்கு மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்வீர்கள். அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். மழலைச் செல்வம் கிடைக்கும். மனதிற்கினிய தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ஆனாலும் புதியவர்களுடன் கூட்டு சேர வேண்டாம். மேலும் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி சமுதாயத்தில் புகழ் பெற்ற பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் அந்தஸ்து உயரும். சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு உங்களின் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். அனாவசியச் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டாம். வரவுக்குத் தகுந்த செலவுகளைச் செய்யவும். மேலும் மனதில் எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றும். முழுமையாக வாசிக்க > துலாம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்களின் கிரகநிலைகளை வைத்து பார்க்கும் போது நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாகக் கைகூடும். உங்களைப் பகடைக்காயாக பயன்படுத்தி வந்த உற்றார், உறவினர்களின் உள்மனதைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

உங்கள் அருகிலேயே இருந்து சதி செய்தவர்கள் ஓடி ஒளிவார்கள். அரசாங்கத்தில் உங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். காத்திருந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். நெடுநாட்களாக இழுபறியாக நடந்துவந்த வழக்குகள் சட்டென்று சாதகமாக முடியும். முழுமையாக வாசிக்க > விருச்சிகம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) குருவை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இந்த ஆண்டு ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால்பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து சகஜ நிலை உருவாகும்.

உங்களின் தகுதிக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மனவளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள் அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். முழுமையாக வாசிக்க > தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

மகரம் (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) சனியை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே! இந்த ஆண்டு மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான சிந்தனைகள் குடிகொள்ளும். கடன் பிரச்சினை தீர வழிகளைக் காண்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடைகள் தீர்ந்து மீண்டும் வேலைகள் துவங்கும். இல்லத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். ஆனால் விளையாட்டாக பேசும் வார்த்தைகள் வீண் வம்புக்கு வழி வகுக்கும். எனவே கவனமாக இருக்கவும்.

மறதியால் முக்கிய விஷயங்களில் தாமதம் ஏற்படலாம். உங்களின் செல்வாக்கு உயரத் தொடங்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை முறையாகச் செய்து குடும்ப வளத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். போட்டியாளர்களின் நெருக்கடிகளைத் தாண்டி வேலைகளை சரியாக முடிப்பீர்கள். முழுமையாக வாசிக்க > மகரம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) சனியை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! இந்த ஆண்டு நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும்.

உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். வெளியூர் – வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். லாபகரமான முதலீடுகளைச் செய்து உபரி வருமானம் நிரந்தரமாக வர வழி வகுத்துக் கொள்வீர்கள். மறைமுகக் கலைகளான ஆழ்மனத் தியானம் போன்றவற்றைச் சுயமாகக் கற்றுக் தேர்ந்து அடுத்தவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப் பெரிதுபடுத்தமாட்டீர்கள். மேலும் முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த காலகட்டத்தில் மன்னித்துவிடுவீர்கள்.முழுமையாக வாசிக்க > கும்பம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) குருவை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே! இந்த ஆண்டு சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும்.

உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீரியமும் பெற்று உங்களது செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாகவே தொடரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். முழுமையாக வாசிக்க > மீனம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1344466' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *