மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) – சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் புதன் – தொழில் ஸ்தானத்தில் சூரியன் – லாப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் புத்திக்கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மனவருத்தம் உண்டாகலாம், கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.
அஸ்வினி: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.
பரணி: இந்த வாரம் வரவேண்டி இருந்தும் வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: முருகனை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் குரு (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன்- தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள்.
வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். `
ரோகினி: இந்த வாரம் புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம்.
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – சுக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன்- பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – தொழில் ஸ்தானத்தில் ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
பயணங்கள் சாதகமான பலனை தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுத லாக உழைக்க வேண்டியது இருக்கும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பண விஷயத்தில் சிக்கனத்தை கடை பிடிப்பபீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
திருவாதிரை: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சினைகள் தீரும். பண கஷ்டம் தீரும்.
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – ராசியில் சந்திரன், செவ்வாய்(வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் – களத்திர ஸ்தானத்தில் சூரியன்- அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சினைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன்படுத்தி சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
பூசம்: இந்த வாரம் அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.
ஆயில்யம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.
பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் – களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – அஷ்டம ஸ்தானத்தில் ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.
குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது.அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.
மகம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
பூரம்: இந்த வாரம் திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – சுக ஸ்தானத்தில் புதன் – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன்- ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – களத்திர ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) – லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் புத்திசாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார்.
உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவ பூர்வமான அறிவு திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். பெண்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும்.
அஸ்தம்: இந்த வாரம் தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் – சுக ஸ்தானத்தில் சூரியன்- பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழி செய்யும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும்.
பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
சுவாதி: இந்த வாரம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை தீரும்.
பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன்- சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – பஞ்சம ஸ்தானத்தில் ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு (வ) – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் புத்திகூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள். குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும்.
குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனக்குழப்பம் நீங்கும். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காரியங்களை சாதிப்பீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
அனுஷம்: இந்த வாரம் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதிநுட்பத்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள்.
கேட்டை: இந்த வாரம் கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
பரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரிய தடை நீங்கும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன்- தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – சுக ஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 18.01.2025 அன்று செவ்வாய் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மனத்தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கவனத் தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.
மூலம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
பூராடம்: இந்த வாரம் பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.
பரிகாரம்: பைரவரை வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சூரியன்- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – பாக்கிய ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 18.01.2025 அன்று செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன் செயல்படுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவோணம்: இந்த வாரம் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்கியம் பெறும். கஷ்டங்கள் குறையும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சுக்கிரன், சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் குரு (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் கவுரவ பிரச்சினை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும் வாய்ப்பு உண்டு. சூரியன் சஞ்சாரம் பணவரத்தை தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.
பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.
சதயம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – களத்திர ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் சூரியன் – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 18.01.2025 அன்று செவ்வாய் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் ராசியாதிபதி குரு தனது சஞ்சாரத்தின் மூலம் சாதகமான பலனை தருவார். பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம்.
உத்திரட்டாதி: இந்த வாரம் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது.
ரேவதி: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |