நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் – உத்தராயனம் – சிசிர ரிது – பங்குனி மாதம் – 30-ம் தேதி பின்னிரவு (விஸ்வாவஸு வருஷம் சித்திரை 01 முன்னிரவு) – 14. 04. 2025 – அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையும் – கிருஷ்ண பக்ஷ பிரதமையும் – சுவாதி நக்ஷத்ரமும் – வஜ்ர நாமயோகமும் – கவுலவ கரணமும் – சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 2.38க்கு (உதயாதி நாழிகை: 50:56)க்கு மகர லக்னத்தில் ஸ்ரீவிஸ்வாவசு வருஷம் பிறக்கிறது. 12 ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் தனித்தனியாக > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
கத வர்த்தமான வருஷங்கள்: கதசாலிவாஹண 1947 – 48 | கல்யப்தம் – 5126 | வர்த்தமான ஆங்கிலம் – 2025 – 2026 | பஸலி – 1434 – 1435 | கொல்லம் – 1200 – 1201 | வர்த்தமான ஹிஜ்ரி – 1446 – 47 | விக்ரமசகம் – 2081 – 82 | வள்ளுவர் – 2057 | பிரபவாதி – 39 | சேஷகலி – 426874
கிரக பாதசார விபரங்கள்: லக்னம் – அவிட்டம் 2ம் பாதம் – செவ்வாய் சாரம் | சூரியன் – அஸ்வினி 1ம் பாதம் – கேது சாரம் | சந்திரன் – சுவாதி 1ம் பாதம் – ராகு சாரம் | செவ்வாய் – புனர்பூசம் 4ம் பாதம் – குரு சாரம் | புதன் – உத்திரட்டாதி 1ம் பாதம் – சனி சாரம் | குரு – மிருகசீரிஷம் 1ம் பாதம் – செவ்வாய் சாரம் | சுக்கிரன்(வ) – உத்திரட்டாதி 1ம் பாதம் – சனி சாரம் | சனி – சதயம் 2ம் பாதம் – ராகு சாரம் | ராகு – பூரட்டாதி 4ம் பாதம் – குரு சாரம் | கேது – உத்திரம் 2ம் பாதம் – சூரிய சாரம் | ராகு தசை இருப்பு: 14 வருஷம் – 04 மாதம் – 23 நாள்
விஸ்வாவசு வருஷத்தின் நவநாயகர்கள் – விஸ்வாவசு வருஷ வெண்பா:
விசுவா வசு வருடம் வேளாண்மை யேறும்
பசுமாடு மாடும் பலிக்குஞ் – சிசுநாசம்
மற்றையரோ வாழ்வார்கண் மாதவங்கண்
மீறுமே யுற்றுலகி னல்லமழை யுண்டு.
– இடைக்காட்டார்
பாடல் விளக்கம்: விசுவாவசு வருஷம் விவசாயம் செழிக்கும். பசுக்கள், காளை மாடுகள் மற்ற கால்நடைகள் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வியாதி கண்டு இழப்புகள் ஏற்படலாம். நாட்டு மக்கள் சுகமாக வாழ்வார்கள். நாடு முழுவதும் தர்ம காரியங்கள், தவங்கள் நடைபெறும். நாடு முழுவது நல்ல மழை பொழிந்து சுபிக்ஷம் ஏற்படும் என வெண்பாவில் சொல்லப்பட்டுள்ளது.
பொது பலன்கள்: சகல வித ஜீவராசிகளுக்கு சுபிக்க்ஷம் ஏற்படும். 1-க்கும் 2-க்கும் உடைய சனிபகவான் ஆட்சிபலம் பெற்று இந்த விசுவாவசு வருடம் ரஸாதிபதியாக பதவி வகிக்கிறார். சூரியன் பகவான் இவ்வாண்டு ராஜாவாகவும், அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதியாக வருவதால் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நன்மைகள் ஏற்படும். இயற்கை வளம் பெருகும். மழை நன்றாக பொழியும். அணு ஆயுத உற்பத்தி அதிகரிக்க நேரும். இரும்பு எஃகு தளவாடங்கள் உற்பத்தி அதிகரிக்கும். உலகத்தில் உணவு பொருட்களின் உற்பத்தி அதிக அளவில் அதிகரிக்கும். உப்பு உற்பத்தி அதிகரிக்க நேரும். விமான போக்குவரத்தில் பல அதி நவீன வசதிகள் ஏற்படும். எரிவாயு உற்பத்தி அதிகரிக்க நேரும் உடனுக்குடன் விலை வாசியும் அதிகரிக்க நேரும்.
மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்க நேரும். இவ்வாண்டு நீல மேகம் கிழக்கு திக்கில் உற்பத்தி ஆவதால் வடமாநிலம் கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். மரக்கால் (குறுணி) மழையும் இவ்வாண்டு ஆதாயம் 65, விரையம் 59, வருவதால் அதிகமான ஆதாயம் 06 வருவதால் பல நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசாங்கம் அறிவிக்க நேரும். புதிய வரிகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். வருடம் பிறக்கும் போது லக்கினத்தை குரு பார்ப்பது உகந்ததாகும்.
பல சுப நிகழ்வுகள் இந்த வருடம் நடக்கும். குடிநீர் தேவை அதிகரிக்க நேரும். அடிக்கடி மின்சாரம் தடைகள் ஏற்படும். உற்பத்தி ஆகும். மோட்டார் ரக பேட்டரி வாகனத்தில் உற்பத்தி அதிகரிக்கும், பொது இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். பல புதிய ரக மோட்டார் ரக வாகனங்கள் அதிக அளவில் பல தகராறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அந்நிய நாடுகளின் முதலீடு அதிக அளவில் இந்தியாவிற்கு வர வாய்புள்ளது. மஞ்சள் விலை ஏறி இறங்கும். தங்கம் வெள்ளி விலை உச்சத்தை தொடும். மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கும். நிலக்கரி இரும்பு சுரங்கங்கள் பெட்ரோலியம் கிணறு போன்றவற்றில் விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். | 12 ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் தனித்தனியாக > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
உலக ஜெகத் ஜாதகத்திற்கு மகரம் லக்கினம் ஆகும். லக்கினத்திற்கு அஷ்டமாதிபதியான சூரியன் பகவான் மேஷத்தில் நட்பு பலம் பெற்றும் லக்னத்தை செவ்வாய் இருப்பதால் இந்தியாவில் புதிய தொற்று கிருமி பரவ நேரும். இந்த ஆண்டு 08-க்குடைய அஷ்டமாதியான ராஜ கிரஹமாகிய சூரியன் பசுவான 4 பதவிகளை வகிப்பதாலும் தனது நட்பு வீடான மேஷத்தில் அமர்ந்து உச்சம் பெற்று 7-ஆம் பார்வையாக சுக்கிரன் வீட்டையும் 10-ஆம் பார்வையாக லக்னத்தையும் பார்ப்பதால் போலி பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழகத்தில் இருக்கும்.
நிலுவையில் உள்ள அனைத்து கோர்ட் கேஸ் வழக்குகள் உடனுக்குடன் முடிக்கு வரும். சந்திரனுக்கு சுக்கிரன் மறைந்திருப்பதால் பெண்களுக்கு அவமாரியாதை நடைபெறலாம். பாலியல் தொல்லைகள் அதிக அளவில் நடைபெற வாய்ப்புள்ளது. தீர்த்த யாத்திரை புனிதபயணம் செல்பவர்களுக்கு பல தொல்லைகள் ஏற்படும். சற்று ஜாக்கிரதையாக பிரயாணம் செய்வது நலம் தரும். பூச்சி – கருவண்டு போன்ற ஜீவராசிகள் அதிக அளவில் இனபெருக்கம் அடைய நேரும். சித்திரை மாதம் 01-ந்தேதி திங்கள் கிழமை வருவதால் தண்ணீர் பிரச்சினை இருக்காது.
இந்த விசுவாவசு ஆண்டு இரவில் பிறப்பதால் உலக அளவில் புதிய வைரஸ் நோய் தாக்குதல் வரலாம். ஐப்பசி மாதம் 1ம் தேதி சனிக்கிழமை வருவதால் வெங்காயம் தக்காளி சிறுதான்யம் வகைகளின் விலை உயரும். பூண்டு ஏலக்காய், தேங்காய், மாங்காய், புளி போன்றவை விளைச்சல் அதிகரிப்பதுடன் விலை உயர்வும் இருக்க கூடும். சிறுபான்மையினர் வாழும் இடத்தில் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரிக்க கூடும். திருட்டு நில அபகரிப்பு பெண்களுக்கு எதிரான வழக்கு அதிகரிக்க நேரும்.
ராஜா சூரியன் பலன்: நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பதவி மாற்றம் உண்டாகும். அதிக வெயில் – அதிக மழை – அதிக குளிர் காணப்படும். அவ்வப்போது தீ விபத்துக்கள் உண்டாகலாம்.
மந்திரி சந்திரன் பலன்: இந்த ஆண்டு மந்திரியாக சந்திரன் பகவான் வருவதால் சரியான நேரத்தில் மழை பெய்யும். புதுவகை விவசாய உற்பத்தி உண்டாகும்.
மேக அதிபதி சூர்யன் பலன்: இந்த ஆண்டு மேக அதிபதியாக சூரிய பகவான் வருவதால் உணவு தட்டுப்பாடு உண்டாகலாம். விலைவாசி விண்ணை தொடும்.
ஸஸ்யாதிபதி குரு பலன்: இந்த ஆண்டு ஸஸ்யாதிபதியாக குரு பகவான் இருப்பதால் கடலை, மஞ்சள் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
சேனாதிபதி சூரியன் பலன்: சூரியன் பலத்தால் இந்த ஆண்டு விலைவாசி உயர்வால் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும். அரசியல்வாதிகள் அணி மாற்றம் நிகழும்.
ரஸாதிபதி சனி பலன்: திரவ பயிர்கள் குறையும். கசப்பு பயிர்கள் அதிகம் விளையும்.
தான்யாதிபதி செவ்வாய் பலன்: இந்த ஆண்டு மழை குறையும். சிகப்பு நிற பயிர்கள் அதிகரிக்கும். நெருப்பு சம்பந்தமான தொழில்கள் அதிகரிக்கும்.
நீரஸாதிபதி புதன் பலன்: இந்த ஆண்டு மஞ்சள் குங்குமப்பூ தங்கம் வியாபாரம் அதிகரிக்கும். பச்சை நிற பயிர்கள் அதிகம் விளையும்.
சித்திரை மாதப் பிறப்பின் பலன்: இந்த ஆண்டு சித்திரை மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதால் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களினால் மக்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். பெண்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வார்கள் பெண்களை மதிப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்
மகர சங்கராந்தி பலன்: இந்த ஆண்டு புதன்கிழமை பிறப்பதால் நல்ல மழை பெய்யும். கல்வி சம்பந்தமான விஷயங்களில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
12 ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் தனித்தனியாக > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |