‘மெண்டல் மனதில்’ படத்தின் படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மெண்டல் மனதில்’. இதில் நாயகனாக நடித்து, தயாரித்து, இசையமைக்கவும் உள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதன் பட பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது.
இதில் நாயகியாக மாதுரி ஜெயின் நடித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக அருண் ராதாகிருஷ்ணன். எடிட்டராக பாலாஜி, கலை இயக்குநராக ஆர்.கே.விஜய முருகன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தினை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரித்து வருகிறார். ஒரே கட்டமாக சென்னையிலேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.