ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் “கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ நிகழ்ச்சியில் இயக்குநர் லிங்குசாமி கலந்துகொண்டு, பல விஷயங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் சினிமாக் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கும் அவர், அஜித் குறித்தும் பேசியிருக்கிறார். அஜித் குறித்துப் பேசிய லிங்குசாமி, ” இன்னைக்கு அஜித் ஒரு இடத்தை பிடிச்சிருக்காருல… அதை அன்னைக்கே அவர் என்கிட்ட சொல்லிட்டாரு. ஒருநாள் படத்தின் சூட்டிங்கின்போது கேரவனில் உட்கார்ந்துப் பேசிக்கிட்டு இருந்தோம். ‘ஜி நம்மதான் ஜி, முதல் இடத்துக்கு நம்மதான் ஜி வருவோம்’ அப்படின்னு சொல்லுவாரு. அதைப் பார்க்கும்போது சிலருக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் மாதிரி இருக்கும்.

ஆனால் அது அப்படி கிடையாது. வர்றோம், தட்டுறோம், தூக்குறோம், அப்படின்னு ரொம்ப பாசிட்டிவா இருப்பாரு. ஒரு ட்ரீம்லேயே இருப்பாரு. அந்த விஷயத்தைப் பத்தி மட்டுமே நினைச்சிட்டு இருப்பாரு. நம்ம இந்த இடத்துக்கு வந்து சேருவோம். நமக்கான இடம் இருக்குன்னு அவர் சொல்லிட்டே இருப்பாரு. அவர்கிட்ட இருந்து வர அந்த வாய்ஸ், அந்த லுக் எல்லாமே எம்.ஜி.ஆர் மாதிரி இருக்கும்.