Last Updated : 15 Jan, 2025 06:26 PM
Published : 15 Jan 2025 06:26 PM
Last Updated : 15 Jan 2025 06:26 PM

சவுபின் சாகீர் மீண்டும் இயக்கவுள்ள படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கவுள்ளார். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சவுபின் சாகீர். இவருக்கு நடிகர், இயக்குநர் என பல முகங்கள் உண்டு. முதன்முறையாக 2017-ம் ஆண்டு ‘பறவா’ என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு இயக்கத்தில் இருந்து விலகி முழுக்கவே நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது மீண்டும் இயக்குநராக முடிவெடுத்துள்ளார் சவுபின் ஷாகீர். இதில் ‘பறவா’ படத்தில் நடித்த துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் தயாரிப்பாளர் மற்றும் உடன் நடிப்பவர்கள் விவரம் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது. பல்வேறு படங்களில் நடித்து வரும் சவுபின் ஷாகீர், தற்போது முழுக்க திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
FOLLOW US
தவறவிடாதீர்!