‘மெஹந்தி சர்க்கஸ்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறது.
2019-ம் ஆண்டு வெளியான படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படமும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
இயக்குநர் ராஜு சரவணன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தத் திரைப்படம் பாலக்கோடு , தருமபுரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைப் பகுதிகளின் நிலப்பரப்புகளில் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரம் விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. கோடையில் படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.