அவர்கிட்ட வேலைப் பார்த்துட்டு இருக்கும்போது எனக்கு ரஹ்மான்கிட்ட வேலை பார்க்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. ரஹ்மான்கிட்ட `பார்த்தாலே பரவசம்’, `லகான்’, `பாய்ஸ்’ போன்ற படங்கள்ல வேலை பார்த்தேன். இதற்கிடையில என்னுடைய மனைவியிடமிருந்து எனக்கு விவாகரத்து ஆகிடுச்சு. அதுக்கப்புறம் ஷங்கர் சாரை சந்திச்சேன். அப்படிதான் `காதல்’ திரைப்படத்தோட வாய்ப்பு கிடைச்சது. இந்தப் படத்தோட ரிலீஸுக்கு முன்னாடி இன்னொரு பெண்ணை நான் காதலிச்சேன்.
இந்த விஷயம் அந்த பெண் வீட்டுல தெரிய வந்து என் மேல குற்றத்தை சுமத்தி என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. எனக்கும் அந்த நேரத்துல ஜாமீன் கிடைக்கவே இல்லை. படம் முடிஞ்சு நான் ஜெயிலில் இருந்து வெளிய வர்றதுக்குள்ள `காதல்’ திரைப்படம் வெளியாகிடுச்சு. வெளிய வந்ததும் பாலாஜி சக்திவேல் சார் எனக்கு இப்படி நடந்ததை எண்ணி வருதப்பட்டார். அந்த கஷ்ட காலம் கடந்த வருடத்தோட முடிஞ்சிடுச்சு!” என்றார்.
இவரின் முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் :