Last Updated : 07 Jan, 2025 10:53 AM
Published : 07 Jan 2025 10:53 AM
Last Updated : 07 Jan 2025 10:53 AM

மலேசிய தமிழர்கள் உருவாக்கியுள்ள படம், ‘கண்நீரா’. மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஹரிமாறன் இசை அமைத்துள்ளார். படத்தின் கதை எழுதி இணை இயக்குநராக கவுசல்யா நவரத்தினம் பணியாற்றியுள்ளார். இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.
படம்பற்றி இயக்குநர் கதிரவென் கூறும்போது, “இது யதார்த்தமான காதல் கதை. நூற்றுக்கு 90 சதவிகிதம் பேர் காதல் வயப்பட்டிருப்பார்கள். காதலர்களுக்கு என்ன மாதிரியான அணுகுமுறை தேவைப் படுகிறது என்பதை கமர்ஷியல் கலந்து ஜனரஞ்சக படமாக உருவாக்கி இருக்கிறோம். பார்வையாளர்களுக்கு மிகவும் நெருக்கமாக இந்தப் படம் இருக்கும். முழுபடப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றது” என்றார்.
FOLLOW US
தவறவிடாதீர்!