மன நிம்மதிக்காக கோயிலுக்கு வருகிறேன் என நடிகர் ரவி மோகன் உருக்கமாக தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரவி மோகன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர், மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனை வழிபட்டார். பின்னர் அவருக்கு கோயில் நிர்வாகம் பிரசாதம் வழங்கியது. சுவாமி தரிசனம் செய்த ரவி மோகன் உடன் பக்தர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அவர் கூறும்போது, “நான் நடித்த திரைப்படம் வெளியானதற்கும், சுவாமி தரிசனம் செய்ய வந்ததற்கும் தொடர்பு இல்லை. மன நிம்மதிக்காகதான் கோயிலுக்கு வருகிறேன். எப்போது வேண்டுமானாலும் கோயிலுக்கு வரலாம். தாய், தந்தையுடன் இருப்பது மன நிம்மதி தருகிறது. கடவுளுக்கு நன்றி. ஜீனி திரைப்படம் 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வரும்” என்றார்.