மனோஜ் பாரதிராஜா மறைவு - வைரமுத்து, தம்பி ராமையா, பாண்டியராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் இரங்கல்

மனோஜ் பாரதிராஜா மறைவு – வைரமுத்து, தம்பி ராமையா, பாண்டியராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் இரங்கல்


பிரேமலதா விஜயகாந்த், “இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இவ்வளவு சிறிய வயதிலேயே நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டதும் அதிர்ச்சி ஆகிவிட்டேன். பாரதி ராஜா சார் எவ்வளவு பெரிய துயரத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

கேப்டனுக்கு “தமிழ்செல்வன்’ என்ற படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் இமயம். இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது” என்று தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், நேரில் அஞ்சலி செலுத்திய கே.எஸ்.ரவிக்குமார், “சமுத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மனோஜிடம் மட்டும் நான் தேதி கேட்க மாட்டேன். அப்படத்தின் படப்பிடிப்பு தருணங்கள்தான் எனக்கு நேற்று முழுவதும் தோன்றிக் கொண்டே இருந்தது.

கே. எஸ். ரவிகுமா

கே. எஸ். ரவிகுமா

சமுத்திரம் திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் கமல் சாரிடமிருந்து ஒரு விருதை மனோஜ் பெற்றார். அதுதான் என்னுடைய முதல் விருது என்று கூட மனோஜ் சொல்லி இருக்கிறார்.

வயது மூப்பு காரணமாகத் தள்ளாடும் பாரதிராஜா சார் இதனால் ரொம்ப உடைந்து போய் இருக்கார்” என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

“நாம் இருக்கும்போதே மகனையோ, மகளையோ இழப்பது மிகவும் கடினமான ஒன்று. இயக்குநர் இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார் எனத் தெரியவில்லை.

எந்த வார்த்தையைச் சொல்லியும் அவரைத் தேற்ற முடியாது” என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வருகிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *