இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்குத் திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
48 வயதான அவர் சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று (25 மார்ச்) மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான திரு. மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.