null
`மகனின் படம் ஹிட்டானால் புகைப்பிடிப்பதை கைவிட்டு விடுவேன்’ - சபதம் செய்துள்ள நடிகர் ஆமீர் கான் | I will quit smoking if my son's film is a hit: Aamir Khan assures

`மகனின் படம் ஹிட்டானால் புகைப்பிடிப்பதை கைவிட்டு விடுவேன்’ – சபதம் செய்துள்ள நடிகர் ஆமீர் கான் | I will quit smoking if my son’s film is a hit: Aamir Khan assures


பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மகன் ஜுனைட் கான் புதிதாக லவ்யபா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஹூரோயினாக நடித்துள்ளார். இது குஷி கபூருக்கு பெரிய திரையில் முதல் படமாகும். இதனால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை ஆமீர்கானே தயாரிக்கிறார்.

இப்படத்தில் குஷி கபூரின் நடிப்பை ஆமீர் கான் வெகுவாக புகழ்ந்து பேசினார். அதோடு நடிகை ஸ்ரீதேவியுடன் குஷி கபூரை ஒப்பிட்டுப்பேசினார். இப்படம் பிப்ரவரி 7-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் முதல் பாடல் திரைக்கு வந்தபோது குஷி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்திருந்தனர். ஆமீர் கான் இப்படம் குறித்து அளித்துள்ள பேட்டியில், “‘லவ்யபா படம் ஹிட்டானால் நான் புகைப்பிடிப்பதை கைவிடுவேன். இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது பொழுதுபோக்கிற்க்கான படம்.

குஷி கபூர்

குஷி கபூர்

மொபைல் போன்களால் நமது வாழ்க்கை மிகவும் மாறிவிட்டது. தொழில்நுட்பத்தால் நம் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். நான் படத்தைப் பார்த்து குஷியைப் பார்த்தபோது, ​​ஸ்ரீதேவியை அவரிடம் பார்க்க முடிந்தது. குஷி கபூரிடம் ஸ்ரீதேவியின் ஆற்றல் இருந்தது. அதனை என்னால் பார்க்க முடிந்தது. நான் ஸ்ரீதேவியின் மிகப்பெரிய ரசிகை,” என்று ஆமீர் கான் தெரிவித்தார்.

லவ்யபா படத்தை லால் சிங் சத்தா படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இயக்கி இருக்கிறார். வரும் 10ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது. இப்படத்தை ஆமீர் கான் மிகவும் எதிர்பார்த்துள்ளார். அடுத்ததாக ஆமீர் கான் நடித்த சிதாரே ஜமீ படமும் திரைக்கு வர இருக்கிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *