![பேபி அண்ட் பேபி விமர்சனம்](https://media.vikatan.com/vikatan%2F2025-02-14%2Fcimw5ia8%2FBaby.jpeg?q=75&auto=format%2Ccompress)
தேவையில்லாத இடத்தில் மாஸ் ரியாக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் ஒட்டாத நடிப்பு, துருத்திக்கொண்டிருக்கும் மேக்கப் என ‘நடிகர் ஜெய்யை காணவில்லை’ என்று போஸ்டர் ஓட்டும் அளவிற்கு வேறு ஒரு ஆளாக சுமாரான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் நடிகர் விஜய் போலவே பாடி லாங்குவேஜை மிமிக் செய்வதெல்லாம் தேவையே இல்லாத ஆணி! கலாய் ஒன்லைனர் போடுவது, நக்கல் செய்வது என வழக்கமான கதாபாத்திரத்தில் யோகிபாபு. ஆனால், விரல்விட்டு எண்ணும் இடங்களில் மட்டுமே சிரிப்பு எட்டிப்பார்க்கிறது. சாய் தன்யா, பிரக்யா நாக்ரா ஆகிய இருநாயகிகளுக்கும் குழந்தையைக் காணவில்லை என்று அழுவதற்கு சில காட்சிகளும், பாடுவதற்கு ஒரு பாடலும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆண் வாரிசுக்கு அடம்பிடிக்கும் சத்யராஜின் நடிப்பில் பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. தும்மினாலும் சகுனம் பார்க்கும் இளவரசு, ஒருசில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன், தங்கதுரை, ஆனந்த் ராஜ், சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி, விக்னேஷ் காந்த் என அடிஷனல் ஷீட் கேட்கும் அளவுக்கு ஆட்கள் இருந்தும், சிரிப்பு ஒரு பக்கம் கூட முழுதாக நிரப்பப்படவில்லை.