குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று கதாநாயகியாக மாறியிருப்பவர் அனிகா சுரேந்திரன்.
அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம், மம்மூட்டியின் பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரவேற்பை பெற்றார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தார்.
பின்னர் தெலுங்கில் ‘புட்ட பொம்மா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது தனுஷ் இயக்கி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.