புதுச்சேரி பின்னணியில், அம்மாநில கலைஞர்கள் நடிக்கும் படம், ‘மனிதம்’. யுவர் பேக்கர்ஸ் புரொடக் ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் சார்பில் கிருஷ்ண ராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.
மதுநிகா ராஜலக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜே புருனோ சாவியோ இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்குப் பரணி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி பேசிய கிருஷ்ணராஜு, “நாயகனுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது எந்த தருணத்தில் எப்படிப் புரிகிறது என்பது படத்தின் கதை. உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். திரைக்கதை சுவாரசியமாக இருக்கும்” என்றார். இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், அரவிந்தராஜ் பங்கேற்றனர்.