வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகர்களுக்கு இருக்கிறது. பெரிய பெரிய ஹீரோக்கள் கூட இப்படி சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ராம் சரண், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி ஆர் உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் வெற்றிமாறன் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,” மிக முக்கியமான இயக்குநர்கள் எல்லாம் சமீபத்தில் வந்துவிட்டார்கள். கார்த்திக் சுப்புராஜ் காலக்கட்டம் வரை வந்த இயக்குநர்களின் பெயர்கள் எல்லாம் நினைவில் இருக்கிறது. அதன்பிறகு வந்த இயக்கு நர்கள் எல்லாம் ஒரு படம் இரண்டு படத்திற்கு பிறகு தொடர்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால் நிறைய புது இயக்குநர்கள் நன்றாகப் படத்தை இயக்குகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.