பாலையாவுடன் நடனமாடியது சர்ச்சையானது தொடர்பாக ஊர்வசி ரவுதெலா விளக்கம் அளித்துள்ளார்.
பாபி இயக்கத்தில் பாலையா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டாக்கூ மஹாராஜ்’. 4 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தில் பாலையாவுடன் ஊர்வசி ரவுதெலா நடனமாடிய பாடல் ஒன்று இணையத்தில் கொண்டாடப்பட்டது. அதே வேளையில் அந்த நடன அசைவுகள் சர்ச்சைகளையும் உருவாக்கியது.
மேலும், அப்படம் வெளியானவுடன் நடைபெற்ற பார்ட்டியில் பாலையா – ஊர்வசி ரவுதெலா இருவரும் அதே மாதிரி நடனமாடினார்கள். அந்த வீடியோ பதிவு மீண்டும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்தச் சர்ச்சை குறித்து ஊர்வசி ரவுதெலா, “பாலையா உடன் ஆடுவது தொடர்பாக, எந்த ஒரு பெர்பார்மன்ஸ் ஆக இருந்தாலும் அது தொடர்பான பலதரப்பட்ட கோணங்களை நான் மதிக்கிறேன். அவரை போன்ற ஒரு ஆளுமையுடன் பணிபுரிவது மிகப்பெரிய ஒரு கவுரவம்.
அந்த அனுபவம் என்பது ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் கலையின் மீதான ஆர்வம் ஆகும். பாலையா சாருடன் அந்த நடனம் என்னை பொறுத்தவரை வெறும் பெர்பார்மன்ஸ் மட்டும் அல்ல. அது கலை, கடின உழைப்பு மற்றும் கலை மீதான மரியாதை. அவருடன் பணிபுரிவது என்பது எனக்கு ஒரு கனவு. ஒவ்வொரு ஸ்டெப்பும், ஒவ்வொரு அசைவும் அழகான ஒரு விஷயத்தை உருவாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.