பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுற்றதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், செம்பியன் வினோத், ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கவுள்ளன. விரைவில் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளது படக்குழு. பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டதால் அடுத்ததாக யாருடைய படத்துக்கு விஜய் சேதுபதி தேதிகள் கொடுக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.